உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொழுந்தட்டு தூய சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கொழுந்தட்டு தூய சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சாத்தான்குளம்: கொழுந்தட்டு தூய சவேரியார் ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.சாத்தான்குளம் அருகேயுள்ள கொழுந்தட்டு புனித சவேரியார் ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் கொடியேற்றி திருப்பலி நடத்தினார். விழாவில் தினசரி மாறையுரை, நற்கருணை ஆசிர் நடக்கிறது. டிசம்பர் 2ம் தேதி பொத்தகாலன்விளை பங்குதந்தை பபியான் ஜோசப் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை, நெடுங்குளம் பங்குதந்தை ஸ்தனிஸ் ஜோமறையுரை, மற்றும் சப்பரபவனி நடக்கிறது. வரும் 3ம் தேதி காலை பெருவிழா திருப்பலி, மாறைமாவட்ட தலைமைச் செயலாளர் அமல்ராஜ் தலைமையில் நடக்கிறது. இரவு சப்பர பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கொழுந்தட்டு பங்குதந்தை ஆரோக்கியராஜ் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !