திருச்சானூரில் கோ பூஜை துவக்கம்!
ADDED :4336 days ago
திருப்பதி: ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறுவது போல், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும், கோ பூஜை துவக்கப்பட்டுள்ளது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், பிரம்மோற்சவம் நடைபெறுவதை ஒட்டி, தேவஸ்தானம், பல புதிய ஏற்பாடுகளை செய்துள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலில், சுப்ரபாதம் சேவைக்கு பிறகு, "கோ பூஜை நடத்துவது போல், திருச்சானூர் கோவிலிலும், நேற்று துவக்கப்பட்டது. கோவிலில் உள்ள யானை, குதிரை, பசு, ஆகியவற்றை பாதுகாக்க, கோவில் நந்தவனத்தில், 62 லட்சம் ரூபாய் செலவில், கஜ சாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தையொட்டி, அரசு சார்பில், தாயாருக்கு, நேற்று, பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டது. காலை10:00 மணிக்கு, கொடியேற்றம் நடந்தது.