ஐயப்ப சுவாமிக்கு 108 திரவிய அபிஷேகம்!
ADDED :4369 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் நேற்று ஐயப்ப சுவாமிக்கு 108 திரவிய அபிஷேக விழாவில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு நேற்று விசேஷ அபிஷேக விழா நடந்தது. விழாவினையொட்டி காலை 6.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி தீபாரதனை நடந்தது. தொடர்ந்து 10.30 மணிக்கு சந்தனம், இளநீர், மஞ்சள், விபூதி, நெய், தேன், பழம், புஷ்பம் உள்ளிட்ட 108 திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடந்தது. இதில் ஐயப்ப பக்தர்கள் உட்பட பலர் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சுவாமி கொலு விருத்தல் மற்றும் 7 மணிக்கு மகா தீபாரதனைகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டினை ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.