நாம சங்கீர்த்தன பாகவதர்களுக்கு விருது!
சென்னை: நாம சங்கீர்த்தனத்திற்கு தொண்டு செய்த, பாகவதப் பெரியோர்களுக்கு, சங்கீர்த்த கலாநிதி விருதுகள் வழங்கப்பட்டன. தி.நகர், கிருஷ்ண கான சபாவில், "நாம சங்கீர்த்தன விழா 2013 கடந்த 22ம் தேதி துவங்கியது. அதையொட்டி, தினமும் காலை முதல் மாலை வரை, பல்வேறு பாகவதர் குழுவினரி"ன், நாம சங்கீர்த்தனம் நடந்தது. நேற்று காலை, 8:30 மணிக்கு, கோவை ஜெயராம பாகவதர் குழுவினரின், "சம்பூர்ண திவ்ய நாம சங்கீர்த்தனம் மற்றும் ராதா கல்யாண உற்சவம் நடைபெற்றது. மாலை, 4:00 மணிக்கு, நாம சங்கீர்த்தனத்திற்கு பல ஆண்டுகளாக தொண்டு செய்து வரும் பாகவதப் பெரியோர்கள் கவுரவிக்கப்பட்டனர். கான்பூர் மாகதேவ பாகவதருக்கு, "சங்கீ"ர்த்தன கலாநிதி விருதை, மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் வழங்கினார். இந்த விழாவில் கலந்து கொண்ட, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திரர் பேசியதாவது : தவறு செய்யாத வாழ்க்கை தான், பக்திக்கு அடையாளம். இறை பக்திக்கு அடையாளமே, எந்த தவறும் செய்யாத உன்னத வாழ்க்கை வாழ்வது மட்டும் தான். நாம் அனைவரும் அப்படிப்பட்ட சீரும் சிறப்புமான வாழ்க்கையை தான் வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில், நல்லிகுப்பு சாமி செட்டியார், வி.வி.சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை "இன்ட்டகிரேட்டட் அகடமி ஆப் பர்பார்மிங் ஆர்ட்ஸ், ஸ்ரீ ராம் குழும நிறுவனம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து மேற்கொண்டன.