செல்வ விநாயகர் கோவில் டிச., 6ல் கும்பாபிஷேகம்
ADDED :4367 days ago
ஈரோடு: ஈரோடு கைக்கோளன் தோட்டத்தில் அமைந்துள்ள, செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் டிச., 6ம் தேதி நடக்கிறது. இதனால், வரும், 5ம் தேதி காலை, 4.30 மணிக்கு மங்கள இசை, மகாகணபதி ஹோமம் மற்றும் வழிபாடு, மாலை, 5 மணிக்கு மங்கள இசை, மகாகணபதி வழிபாடு, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், கலசம் வைத்தல் நடக்கிறது. 6ம் தேதி மூல மந்திரம், காயத்திரி மந்திரம், கலசங்கள் ஆலயம் எழுந்தருள், காலை, 8 மணிக்கு, விமான கோபுரம், மகாகணபதி கும்பாபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.