புதூர் வட்டார சிவன் கோயிலில் சனி பிரதோஷ விழா
ADDED :4367 days ago
புதூர்: புதூர் வட்டார சிவன் கோயிலில் சனி பிரதோஷ விழா நடந்தது. புதூர் குமாரசித்தன்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் புதூர் அருகே உள்ள நாகலாபுரம் காசிவிஸ்வநாதர் கோயிலில் சனி பிரதோஷ விழா நடந்தது. நந்திக்கு 11 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர், அம்பாள், மற்றும் பரிவார தேவதைகள் உட்பட அனைத்து விக்கிரகங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. நாகலாபுரம் காசிவிஸ்வநாதர் கோயிலில் சுவாமியும் அம்பாளும் ரிஷப சிறப்பு வாகனத்தில் எழுந்தருளி கோயிலின் உட்பிரகாரம் மூன்றுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சுவாமிக்கும் நந்திபகவானுக்கும் ஏககால சிறப்பு தீபாராதனை நடந்தது. புதூர் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சனி பிரதோஷ விழா வழிபாட்டில் கலந்து கொண்டனர்.