உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எட்டயபுரம் எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் சனிப்பிரதோஷம்

எட்டயபுரம் எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் சனிப்பிரதோஷம்

எட்டயபுரம்: எட்டயபுரம் எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் கூட்டுபிரார்த்தனையுடன் மகாசனிப்பிரதோஷம் விழா சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. எட்டயபுரம் சமஸ்தானம் ஜோதிர்நாயகி சமேத எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் மாலை மகாகணபதி பூஜையுடன் மகாசனிபிரதோஷம் விழா துவங்கியது. பயிர்கள் செழிக்க பருவமழை வேண்டியும் நவதானியங்கள் செழிப்பதற்கும் உலகம் சுவிட்சமாக இருப்பதற்கும் மகாசங்கல்பம் கூட்டுபிராத்தனை நடந்தது. புண்ணியாவாஜனம் கலசஆவாகனம், பஞ்சுசுத்தஜெபம் பாராயணம் ருத்திரசுத்த ஹோமம் திரவியகுதி பூர்ணாகுதி நடந்தது. அதிகாரநந்தி பகவானுக்கும் எட்டீஸ்வரமூர்த்தி சுவாமிக்கும் பெரியநந்தீஸ்வரருக்கும் கும்பஜல அபிஷேகம் காசிதீர்த்தம் அபிஷேகம் சங்காபிஷேகம் பஞ்சகவ்யஅபிஷேகம் உட்பட 27 அபிஷேகங்கள் நடந்தது. அலங்காரம் அர்ச்சனை தீபாராதனை நடந்தது. பெரிய நந்திபகவானுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் நடந்தது. பக்தர்கள் சோமசுத்திர பிரதட்சண வழிபாடு செய்தனர். சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலின் உட்பிரகாரம் மூன்றுமூறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இரண்டாவது சுற்றில் நடராஜர் சன்னதிமுன்பு சுவாமி அம்பாளுக்கு பன்னீர்அபிஷேகம் சோடாச்சுரஉபச்சார சிறப்பு தீபாராதனை நடந்தது. காண்டாமணியோசையுடன் சங்குநாதம் முழுங்க சுவாமிக்கு பெரிய நந்தீஸ்வரருக்கும் பெரிய நந்தீஸ்வரருக்கும் ஏககால சிறப்பு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !