மழை பெய்ய வேண்டி சிறப்புப் பூஜை
ADDED :4365 days ago
ராஜபாளையம்: மழை பெய்யவேண்டி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள நீர்காத்த அய்யனார் கோயிலில் நேற்று சிறப்புப் பூஜை மற்றும் அன்ன தானம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு நீர்காத்த அய்யனார் பூர்ணம்மாள் புஷ்கலாதேவி மற்றும் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இதர தெய்வங்களுக்கு மழை பெய்யவேண்டி சிறப்பு அபிஷேகம், பூஜை வழிபாடு நடைபெற்றது.