மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்!
ADDED :4426 days ago
ஆனைமலை: கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் முக்கியத்துவம் வாய்ந்தது.இங்கு சயன நிலையில் காட்சி தரும் மாசாணி அம்மனை தரிசிக்க, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தருகின்றனர். அவர்களின் வசதிக்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மனை தரிசிக்க நேற்று முன்தினம் இரவில் இருந்தே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிய தொடங்கினர். நேற்று காலை முதல் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.