உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தூரில் சண்டிஹோம பூஜை

சித்தூரில் சண்டிஹோம பூஜை

வடமதுரை: எரியோடு அருகே இ.சித்தூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில், சண்டி ஹோம பூஜை நடந்தது. நேற்று காலை பூசாரி வீட்டில் இருந்து திருஆபரணப்பெட்டி, பண்டாரப் பேழையுடன் அம்மன் புறப்பட்டு, சித்தூர் சொர்ண விநாயகர் கோயில் சென்று, அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின்னர், சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. சாமுண்டீஸ்வரி கோயிலில் யாகசாலை பூஜைகளை தொடர்ந்து சண்டி ஹோமம், அபிஷேக, ஆராதனை நடந்தது. ஏற்பாட்டினை வல்லக்கவார் என்ற படவனவர் குடி தாயாதிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !