அழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் வனபோஜன உற்சவம் கோலாகலம்!
ADDED :4366 days ago
காஞ்சிபுரம்: அழகிய சிங்கப்பெருமாள் கோவிலில், வனபோஜன உற்சவம் கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அழகிய சிங்கப்பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வனபோஜன உற்சவம் நடைபெறும். இந்தஆண்டு, வனபோஜன உற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 10:00 மணி அளவில், சுவாமி சன்னிதியில் இருந்து பிரகலாத ஆழ்வார் தோட்டத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகமும், திருமஞ்சனமும் நடந்தது. மாலை 5:00 மணி அளவில், புஷ்பஅலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.