உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீர ஆஞ்சநேயர் கோவிலில் 24ம் ஆண்டு மகோற்சவம்

வீர ஆஞ்சநேயர் கோவிலில் 24ம் ஆண்டு மகோற்சவம்

கடம்பத்துார்:கசவநல்லாத்துார் வீர ஆஞ்சநேயர் கோவிலில், 24ம் ஆண்டு மகோற்சவம், வரும், 5ம் தேதி துவங்கி, மூன்று தினங்கள் நடைபெற உள்ளன. கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட, கசவநல்லாத்துார் கிராமத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், ஆண்டுதோறும் மகோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான மகோற்சவம், வரும், 5ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, 5ம் தேதி இரவு, குருபூஜையும், விசேஷ ஆராதனை மற்றும் அபிஷேகம் நடைபெறும். பின், 6ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை, தீபதுாப ஆராதனையும், மாலை, 6:00 மணிக்கு, புஷ்ப அலங்காரம் மற்றும் வடைமாலையுடன் ஆஞ்சநேய சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். மேலும், 7ம் தேதி விடியற்காலை, 2:00 மணிக்கு, திருமுடி வெண்ணெய், தேங்காய் பூஜையும், காலை, 8:00 மணிக்கு, ஆஞ்சநேயர் கோவிலிலிருந்து, சோளிங்கம் புற்பபடுதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !