ஆதிபராசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், பிரதிஷ்டை விழா
ADDED :4367 days ago
திருத்தணி: ஆதிபராசக்தியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் மற்றும் பிரதிஷ்டை விழா நடந்தது.திருத்தணி, நரசிம்மசுவாமி கோவில் தெருவில், ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து, நேற்று கும்பாபிஷேகம் மற்றும் பிராண பிரதிஷ்டை விழா நடந்தது. விழாவை ஒட்டி, கோவில் வளாகத்தில், யாகசாலை மற்றும் 18 கலசங்கள் வைத்து, நேற்று முன்தினம் மாலை, கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, புதிதாக அமைக்கப்பட்ட விமானத்தின் மீது, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, பகல், 12:30 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:30 மணிக்கு, பிராண பிரதிஷ்டை நடந்தது.