ரகூத்தமர் மூலபிருந்தாவனத்தில் சோமவார அமாவாசை வழிபாடு
ADDED :4433 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், மணம்பூண்டி ரகூத்தமர் பிருந்தாவனத்தில் சோமவார அமாவாசையை முன்னிட்டு நாகலிங்கத்தை வலம் வந்து வழிபட்டனர். திங்கள் கிழமை வரும் அமாவாசை சோமவார அமாவாசை என அழைப்பது வழக்கம். இந்நாளில் வேம்பு, அரசமரம் இணைந்திருக்கும் நாகலிங்கத்தை வலம் வந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. நேற்று திருக்கோவிலூர், மணம்பூண்டி ரகூத்தமர் மூலபிருந்தாவனத்தில் உள்ள வேம்பு, அரசமரத்தை பக்தர்கள் வலம்வந்து நாகலிங்கத்திற்கு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர். ரகூத்தமர் மூலபிருந்தாவனம், ஆஞ்சநேயர் சன்னதிகளில் நடந்த சிறப்பு வழிபாட்டிலும் கலந்து கொண்டனர்.