சவேரியார் சர்ச் தேர்பவனி
ADDED :4335 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சவேரியார் சர்ச் தேர்பவனி விழா நவ. 24ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை 6 மணிக்கு நவ நாள் திருப்பலி நடந்தது. நேற்று மாலை 6 மணிக்கு விழா திருப்பலி மறை மாவட்ட பாதிரியார் ராஜமாணிக்கம், உதவி பாதிரியார் சேவியர் ஆரோக்கியசாமி மற்றும் மறை மாவட்ட பாதிரியார்கள் நிறைவேற்றினர். இரவு 7.30 மணிக்கு தேர்பவனி நடந்தது. விழாக்குழுத் தலைவர் இமானுவேல் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று காலை 6.30 மணிக்கு திருப்பலி நிறைவுக்கு பின் கொடியிறக்கப்படுகிறது.