தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ஆயிரத்தொருவர் விழா!
ADDED :4334 days ago
ஆக்கூர்: ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ஆயிரத்தொருவர் விழா வருகிற 5ம்தேதி நடைபெறுகிறது. பிரசித்திப்பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோயிலில் சிறப்புலிநாயனார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கியபோது ஆயிரம் பேரில் ஒருவராக வந்து சிவபெருமான் உணவு சாப்பிட்டதாக தலவரலாறு கூறுகிறது. இதனை நினைவு கூறும் விதமாக தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் ஆயிரத்தொருவர் விழா கொண்டாடப்படுகிறது.