மழை வேண்டி வேப்ப, அரசமரத்திற்கு திருமணம்!
ADDED :4334 days ago
காரைக்குடி: காரைக்குடி அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் கிராம மக்கள் திருமணம் நடத்தினர். சாக்கோட்டை அருகே உள்ள பிரசித்த பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார், ஐந்து வீட்டு காளியம்மன் கோயிலில் மழை பெய்து செழிக்க வேண்டியும், கார்த்திகை மாத அம்மாவாசை யொட்டியும் இக்கோயிலில் உள்ள வேப்பமரம்-அரச மரத்திற்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க அரசமரதிற்கும், வேப்ப மரத்திற்கும் பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.