மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம்: மழையிலும் பக்தர்கள் குவிந்தனர்!
ADDED :4686 days ago
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் தொடர் மழையிலும் ஆயிரக்ககணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி காப்பு அலங்காரம் செய்தனர். தொடர் மழையினால் இரவு 12 மணிக்கு துவங்கும் ஊஞ்சல் உற்சவத்தை 11 மணிக்குத் துவங்கினர். 12 மணி வரை நடந்த உற்சவத்தில் அம்மன் பக்தி பாடல்களும், தாலாட்டு பாடல்களும் பாடினர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர்.