உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் கோயிலில் டிச., 17ல் ஆருத்ரா தரிசனம்!

மீனாட்சி அம்மன் கோயிலில் டிச., 17ல் ஆருத்ரா தரிசனம்!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், டிச.,17 இரவு முதல் டிச.,18 அதிகாலை வரை ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. கோயில் இணைகமிஷனர் ஜெயராமன் கூறியதாவது: எண்ணெய் காப்பு உற்சவம், டிச., 9 முதல் 18 வரை நடக்கிறது. இந்நாட்களில், தினமும் மாலை 6 மணிக்கு, புதுமண்டபத்தில் அம்மன் எழுந்தருளி, தைலக்காப்பு மற்றும் தீபாராதனை முடிந்து, சித்திரை வீதிகளை சுற்றி, கோயிலுக்கு வருவார். டிச., 16 கோ ரதத்தில், அம்மன் எழுந்தருளி, ஆவணி மூல வீதிகளில் உலா வருவார். டிச., 17 கனகதண்டியலில் அம்மன் எழுந்தருளி, சித்திரை வீதிகளை சுற்றி வருவார். டிச.,18 திருவாதிரை அன்று, பொன்னுஞ்சல் மண்டபத்தில் இருந்து, சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் எழுந்தருளி, ஆடி வீதிகளில் வருவர். டிச., 17 ஆருத்ரா தரிசனத்தன்று, இரவு முதல் டிச., 18 அதிகாலை வரை அபிஷேகம் நடக்கிறது. இங்கு மட்டும், பஞ்சலோகத்திலான பஞ்ச சபை நடராஜருக்குரிய 5 உற்சவ திருமேனிகள் உள்ளன. தொடர்ந்து கால பூஜைகள் முடிந்து, டிச., 18 காலை 7 மணிக்கு பஞ்ச சபை உற்சவர், சிவகாமி அம்மனுடன் மாசி வீதிகளில் உலா வருவார். பக்தர்கள், அபிஷேக பொருட்களை டிச., 17 மாலை முதல் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம். டிச., 9 முதல் 18 வரை கோயில் மற்றும் உபயதாரர்கள் சார்பாக உபய தங்கரத உலா, திருக்கல்யாணம் நடக்காது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !