உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உவரி கோவிலுக்கு ரூ.3.37 கோடி நிதி!

உவரி கோவிலுக்கு ரூ.3.37 கோடி நிதி!

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், உவரி சுயம்புலிங்கம் கோவிலில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, சுற்றுலாத் துறை சார்பில், 3.37 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியில், உயர் கோபுர மின் விளக்குகள் அமைப்பது, கோவிலை சுற்றியுள்ள தெருக்களில், மின் விளக்குகள் பொருத்துவது, சுற்றுலாப் பயணிகள் ஓய்வறை, கழிப்பிடம் கட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஈரோடு மாவட்டம், காங்கேயன்பாளையத்தில் உள்ள, நட்டாத்தீஸ்வரர் கோவிலுக்கு, 20.90 லட்சம் ரூபாய், சுற்றுலாத்துறை சார்பில், ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியில், குளியல் அறை, கழிப்பிடம், நிழற்குடை, போன்றவை கட்டப்பட உள்ளது. இதற்கு, அரசு அனுமதி வழங்கி, அரசாணை பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !