கோவில் நிலவறையை தொல்லியல் துறை ஆய்வு!
ADDED :4341 days ago
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நிலவறையை, தொல்லியல் துறையினர் நேற்று பார்வையிட்டனர். திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில், திருப்பணிகள் நடந்து வருகின்றன. மடபள்ளி திருப்பணியில், நிலவறை ஒன்று இருப்பது தெரிய வந்தது. இதை பக்தர்களும், ஆர்வத்துடன் பார்த்தனர். இந்நிலையில், மாமல்லபுரம் தொல்லியல் பராமரிப்பு அலுவலர்கள், கோவிலில் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு வந்த தொல்லியல் அதிகாரிகள், ஆய்வு விவரத்தை, அதிகாரிகளுக்கு தெரிவிப்போம், என்றனர்.