உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமந்தபுரத்தில் மகா விசேஷ பூஜை

அனுமந்தபுரத்தில் மகா விசேஷ பூஜை

அனுமந்தபுரம்: அனுமந்தபுரம் அகோர வீரபத்திர சுவாமி கோவிலில், மகா விசேஷ பூஜை நாளை, 6ம் தேதி நடைபெறுகிறது. திருப்போரூர் அடுத்த அனுமந்தபுரம் அகோர வீரபத்திர சுவாமி கோவிலில், நாளை காலை 6:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், 9:00 மணிக்கு மகா வேள்வியும், பகல் 12:30 மணிக்கு தேவார திருப்புகழ் பாராயணமும் நடைபெறுகிறது. மாலை 3:30 அளவில் பத்தாயிரம் உத்ராட்ச மாலைகள் சமர்ப்பணம் செய்தலுடன், மகா அபிஷேகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !