உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூரில் அய்யப்ப சங்கமம்

திருக்கோவிலூரில் அய்யப்ப சங்கமம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் தர்ம ரக்ஷணசமிதி சார்பில் அய்யப்ப சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.தர்ம ரக்ஷண சமிதி சார்பில் திருக்கோவிலூர் கிழக்கு வீதி லட்சுமி திருமண மண்டபத்தில் அய்யப்ப சங்கமம் நடந்தது. ரங்கநாதன குருசாமி தலைமை தாங்கினார். மேலமங்கலம் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். மாநில இணை அமைப்பாளர் அய்யப்பன் சமிதியில் செயல்பாடுகள், பக்தி மார்க்கத்தில் திளைக்கும் வழிவகைகள் பற்றி மாநில இணை அமைப்பாளர் அய்யப்பன் பேசினார். பாலமணிகண்டன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.சமிதி நிர்வாகிகள் பத்மநாபன், முருகன், தங்கமணி மற்றும் பலர் பங்கேற்றனர். முன்னதாக பக்தர்களின் பஜனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !