சுப்பிரமணியன் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :4342 days ago
சாணார்பட்டி : சாணார்பட்டி ஒன்றியம் கம்பிளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட திருமலைக்கேணி சுப்பிரமணியன் சுவாமி கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை நடந்தது. இதில் சுற்றுப்புற கிராம மக்கள் பங்கேற்று புனித தீர்த்த அருவியில் நீராடி முருகனை தரிசித்தனர். மேலும், இங்குள்ள முத்துக்காமாட்சி மவுனக்குரு பீடத்தில் சிறப்பு வழிப்பாடும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்காக ஏற்பாட்டை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.