கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருவிழா நாளை துவக்கம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா நாளை (6ஆம் தேதி) கோலாகலமாக துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் நிறைவு நாளான 15 ஆம் தேதி தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது. கன்னியாகுமரியில் உள்ள புனித அலங்கார உபகார மாத திருத்தலம் தமிழகத்தில் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இந்த திருத்தலத்தில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். வழக்கம் போல் இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை துவங்குகிறது. நாளை மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்று நிகழ்ச்சி நடக்கிறது. காலை 6 மணிக்கு திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சைக் கொடிகள் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு திருக்கொடி பவனி மற்றும் ஜெபமாலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 6 மணிக்கு திருக்கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட பிஷப் டாக்டர். பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் மறையுரை மறையுரை நடக்கிறது. இரவு 9 மணிக்கு நகைச்சுவை பாட்டு மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு பிரிவு கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் டாக்டர்.கே.பாலகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார்.
இரண்டாம் நாள் திருவிழாவை முன்னிட்டு (7ஆம் தேதி) காலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து 6.15 மணிக்கு திருப்பலி நடக்கிறது. 8 மணி முதல் 9 மணி வரை திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை நடக்கிறது. காலை 10 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு பொழிக்கரை பங்கு தந்தை டயனேஷியஸ் தலைமையில் செபமாலை மற்றும் திருப்பலி நடக்கிறது. கோட்டாறு இணை பங்கு தந்தை எட்மண்ட் தலைமையில் மறையுறை நிகழ்ச்சி நடக்கிறது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு குமரி மாவட்ட உதவி கலெக்டர் ராஜேந்திரன் தலைமையில் பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 3 ஆம் நாள் நிகழ்ச்சியை காலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலியுடன் துவங்குகிறது. காலை 6.15 மணிக்கு மறை மாவட்ட பொருளாளர் பிரான்ஸிஸ் போர்ஜியோ தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து கன்னியாகுமரி புனித மரியன்னை சமூகக் கல்லூரி தாளாளர் சேவியர் லாரன்ஸ் மறையுறை நிகழ்த்துகிறார். காலை 10 மணிக்கு திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் டாக்டர்.யுவான் அம்புரோஸ் தலைமையில் செபமாலை, திருப்பலி நடக்கிறது. இரவு 9 மணிக்கு பங்கு தந்தை மரியசெல்வம் தலைமையில் மறைக்கல்வி ஆண்டுவிழா நடக்கிறது.
நான்காம் நாள் திருவிழாவை முன்னிட்டு (9ஆம் தேதி) காலை 5 மணிக்கும் 6.15 மணிக்கும் திருப்பலி நடக்கிறது. 9 மணிக்கு திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை நடக்கிறது. 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு பங்கு தந்தை ராஜன் தலைமையில் செபமாலை மற்றும் திருப்பலி நடக்கிறது. பங்கு தந்தை அமலதாஸ் டென்சிங் மறையுறை நிகழ்த்துகிறார். இரவு 9 மணிக்கு சமூக கருத்துகளை மிகவும் வலியுறுத்தி பாடியது வாழ்ந்த கலைஞர்களா? வாழும் கலைஞர்களா ? என்னும் தலைப்பில் கன்னியாகுமரி டி.எஸ்.பி செல்வராஜ் தலைமையில் பட்டி மன்றம் நடக்கிறது.
ஐந்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு (10 ஆம் தேதி) காலை 5 மற்றும் 6.15 மணிக்கு திருப்பலி ந்டக்கிறது. 9 மணிக்கு திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும், 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு இனயம் பங்கு தந்தை குணபால் ஆராச்சி தலைமையில் செபமாலை, திருப்பலி நடக்கிறது. பங்கு தந்தை மெர்லின் மறையுறை நிகழ்த்துகிறார். இரவு 9 மணிக்கு களரி கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
ஆறாம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்சி மறை மாவட்ட பிஷப் டாக்டர். டோனி டிவோட்டா தலைமையில் செபமாலை, திருப்பலி, மற்றும் மறையுரை நடக்கிறது. முன்னதாக காலை 10 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி நடக்கிறது. இரவு ஒன்பது மணிக்கு கன்னியாகுமரி பேரூராட்சி தலைவி பிரபா வின்ஸ்டன் முன்னிலையில் அன்பிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
ஏழாம் நாள் விழாவை முன்னிட்டு மேலமணக்குடி பங்கு தந்தை ஆன்றனி அல்காந்தர் தலைமையில் செபமாலை மற்றும் திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து அன்னை நகர் பங்கு தந்தை விஜயன் ராஜன் பாபு தலைமையில் மறையுரை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது. எட்டாம் நாள் கோட்டாறு மறைமாவட்ட குருகுல முதல்வர் சாலமோன் தலமையில் செபமாலை திருப்பலி நடக்கிறது. இரவு 9 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது. ஒன்பதாம் நாள் திருவிழாவை முன்னிட்டு கோட்டாறு பங்கு தந்தை ஜூலியஸ் தலைமையில் திருப்பலியும் பங்கு தந்தை எஸ்லின் தலைமையில் மறையுறையும் நடக்கிறது. காலை 8 மணி முதல் 9 மணி வரை திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து கிறிஸ்து நகர் பங்கு தந்தை லியோன் கென்சன் தலைமையில் செபமாலை, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசிர் நிகழ்ச்சிகள் நடக்கிறது. பங்கு தந்தை சகாயதாசு மறையுறை நிகழ்த்துகிறார். இரவு 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்க தேர்பவனி நடக்கிறது.
10 நாள் திருவிழா: பத்தாம் நாள் திருவிழாவை ஒட்டி காலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி நடக்கிறது. காலை 6 மணிக்கு பெங்களூரு இந்திய ஆயர் பேரவை செயலர் ஜாண் குழந்தை தலைமையில் திருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. அருட்பணி ஸ்டான்லி சகாய சீலன் மறையுறை நிகழ்த்துகிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி நடக்கிறது. 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது. 10 மணிக்கு மலையாளத் திருப்பலியும், 12 மணிக்கு தமிழில் திருப்பலியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், மற்றும் நற்கருணை ஆசிர் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் உயர் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.