உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சியில் சங்கீத ஆராதனை விழா!

பொள்ளாச்சியில் சங்கீத ஆராதனை விழா!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடந்த சங்கீத ஆராதனை விழாவில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், அவர்களின் கர்நாடக இசை திறமையை வெளிக்கொணர்ந்தனர். பொள்ளாச்சி ஸ்ரீ சிவா சங்கீதாலாயா சார்பில், சங்கீத ஆராதனை விழா புளியம்பட்டி ரோட்டரி மஹாலில் நடந்தது. இவ்விழாவில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கர்நாடக இசை வாய்ப்பாட்டிலும், இசை கருவியிலும் பாடினர். விழாவில், கணேஷன் வயலினும், கடையநல்லூரைச்சேர்ந்த நாராயணன் மிருதங்கமும், சஞ்சய்ராஜ் தபேலாவும் வாசித்தனர். சிவா சங்கீதாலாயா ஆசிரியர்கள் செந்தில் சிவா மற்றும் முத்துக்குமரன் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில், ஆனைமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசங்கர், இசை ஆசிரியர்கள் சாதிக், ஆறுமுகம், லட்சுமணசாமி உட்பட பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !