ராமேஸ்வரம் கோவில் யானைக்கு மணி மண்டபம்
ADDED :4689 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவில் யானை பவானிக்கு, 4.50 லட்சம் ரூபாயில், மணி மண்டபம் அமைக்க, பூமி பூஜை நடந்தது. ராமேஸ்வரம் கோவில் யானை பவானி, 42. கடந்த ஆண்டு, நவ., 25ல், முதுமலையில் நடந்த புத்துணர்வு முகாமில், ஆற்றில் விழுந்து இறந்தது. அதன் உடல், ராமேஸ்வரம் கோவிலுக்கு சொந்தமான, "கார் பார்க்கிங் பகுதியில் புதைக்கப்பட்டது. யானையின் நினைவாக, மணி மண்டபம் அமைக்க, கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. பவானி இறந்து ஒரு ஆண்டு முடிவடைந்ததால், டிச 6; கார் பார்க்கிங்கில், கோவில் இணை கமிஷனர், செல்வராஜ் தலைமையில், மணி மண்படத்திற்கான, பூமி பூஜை நடந்தது.