உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைப்பூச காவடிக்கு கும்பாபிஷேகம்

தைப்பூச காவடிக்கு கும்பாபிஷேகம்

இடைப்பாடி: வெள்ளாண்டிவலசு பகுதியில், புதியதாக செய்யப்பட்ட தைசப்பூச காவடிகளுக்கு, டிச 6; கும்பாபிஷேகம் நடந்தது. இடைப்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், ஆண்டுதோறும் நடைபயணமாக, பழநி மலைக்குச் செல்வது வழக்கம். இந்த நடைபயண குழுக்களை அழைத்துச் செல்ல, 10க்கும் மேற்பட்ட அன்னதான குழுவினர் செல்வது வழக்கம். வெள்ளாண்டிவலசு, மலங்காடு, தோப்புகாடு, தாவாந்தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்னியதாசர் வகையறாவை சேர்ந்த பக்தர்கள் மூலம், பழநி தைப்பூச காவடிகள் புதியதாக செய்யப்பட்டது. அந்த காவடிகளுக்கு, கல்வடங்கம் காவிரி ஆற்றில் பூஜை செய்யப்பட்டு, பின்னர் இடைப்பாடியின் முக்கிய பகுதிகளான ஆலச்சம்பாளையம், மேட்டுத்தெரு, தாவாந்தெரு, வெள்ளாண்டிவலசு ஆகிய பகுதிகளில் ஊர்வலம் நடந்தது. பின்னர், வெள்ளாண்டிவலசில், காவடிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !