இலத்தூர் கோயிலில் டிச 7; சூரபத்மன் முகம் காட்டல் வைபவம்
புளியரை : இலத்தூர் கோயிலில் டிச 7; சூரபத்மன் முகம் காட்டல் வைபவம் டிச 7; நடக்கிறது. அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி திருவிழா நடந்து வருகிறது. இவ்வாறு நடைபெற்றுவரும் போது ஒருசில கோயில்களில் குமார சஷ்டி திருவிழா எட்டு தினங்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இக்குமார சஷ்டி திருவிழாவினை முன்னிட்டு இலத்தூர் அறம் வளர்த்த நாயகி சமேத மதுநாதர் கோயிலில் ஆறுமுகருக்கு காப்பு கட்டுதல் அன்றைய மண்டகப்படிதாரர் சைவபிள்ளைமார் சமுதாயம் சார்பில் நடந்தது. இரண்டாம் நாள் கொடியேறுதல் மண்டகப்படிதாரர் தேவர் சமுதாயம் சார்பில் நடந்தன. மூன்றாம் நாள் சிறப்பு பூஜை மற்றும் பஜனைகள் பிராமணர் சமுதாயம் சார்பில் நடத்தினர். நான்காம் நாள் தேவர் சமுதாயம் சார்பில் பூஜைகள் நடந்தன. ஐந்தாம் நாள் விஸ்வகர்மா சமுதாயம் சார்பில் வழிபாடுகள் நடந்தன. ஆறாம்நாள் டிச 7;சேனைத்தலைவர் சமுதாயம் சார்பில் சூரபத்மனுக்கு காப்பு கட்டுதல் முருகன் வீதியுலா நடக்கிறது. ஏழாம் திருநாள் அன்று பால்குடம் அழைத்தல், முருகப்பெருமான் மயில்வாகனத்தில் எழுந்தருளல் தொடர்ந்து சூரபத்மர்கள் சம்ஹாரம் நடைபெறஉள்ளது. எட்டாம் திருநாள் ஆராட்டு விழா காலை நடைபெறும் இரவு வள்ளி தெய்வாணை சமேத ஆறுமுகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏழாம், எட்டாம் திருவிழா இந்து சமய நற்பணி மன்றம் மற்றும் வானியர் சமுதாயம் செய்துள்ளனர்.