உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரசிங்கப் பெருமாள் கோயிலில் விஸ்ணு சகஸ்கரநாம பாராயணம்

நரசிங்கப் பெருமாள் கோயிலில் விஸ்ணு சகஸ்கரநாம பாராயணம்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் யோக நரசிங்கப் பெருமாள் கோயிலில், புனரமைப்பு, கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி, 48 நாட்கள் தொடர்ந்து விஸ்ணு சகஸ்கரநாம பாராயணம் நடைபெற்றது. உத்தமபாளையத்தில் 800 ஆண்டுகள் பழமையான யோக நரசிங்கப் பெருமாள் சமேத மகாலட்சுமி தாயார் கோயில் உள்ளது. கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கோயில் எவ்வித புனரமைப்பு பணிகள் செய்யப்படாமலும், கும்பாபிஷேகம் நடத்தப்படாமலும் முடங்கி உள்ளது. இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் நடக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும் வேண்டி, 48 நாட்கள் விஸ்ணு சகஸ்கரநாம பாராயண நிகழ்ச்சி நடந்தது. பாராயண நிகழ்ச்சியின் 35 வது நாளில், ஆந்திரா, அகோபிலம், கர்நாடகா, மும்பை, சென்னை ஆகிய ஊர்களிலிருந்து சதுர்வேதி சுவாமிகள் தலைமையில், 108 வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு விஸ்ணு பாராயணம், சிறப்பு பூஜைகள் செய்தனர். நிறைவு நாளில் ஏராளமான பக்தர்களும், பெண்களும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நமோ நாராயணா பக்தசபையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !