திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலயத்தில் சம்பக சஷ்டி விழா
                              ADDED :4346 days ago 
                            
                          
                           குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் அருளாட்சிக்குட்பட்ட 5 கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத திருத்தளிநாதர் திருக்கோயில் யோக பைரவர் சன்னதியில் செவ்வாய்க்கிழமை ஸ்ரீ யோக பைரவர் சம்பகசஷ்டி உற்சவம் துவங்கி தினமும்  காலை 9 மணிக்கு அஷ்ட பைரவர் யாகம் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொள்ள காலை 9 மணிக்கு யோக பைரவர் சன்னதிக்கு முன் வைக்கப்பட்டிருந்த புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு மந்திரங்களும் தீபாராதனைகளும் சிவாச்சாரியர்களால் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க பூர்ணாஹூதி நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு மூலவருக்கு பல்வேறு விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைகள் காட்டப்பட்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.