குடியாத்தம் ராமாலையில் விஜயநகரத்து அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4434 days ago
குடியாத்தம் அடுத்த ராமாலை கிராமத்தில் விஜயநகரத்து அம்மன் கோவில் புணரமைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று காலையில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி பூஜை, கிராம தேவதை பூஜை, கோபூஜை, விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து பூஜை, கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலையில் திருவலம் சாந்த சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். முன்னதாக கோவிலுக்கு வருகைதந்த ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோருக்கு தொழிலதிபர் ராமாலை சுந்தர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.