உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எலவனாசூர்கோட்டை கோவிலில் திருவோண நட்சத்திர சிறப்பு பூஜை

எலவனாசூர்கோட்டை கோவிலில் திருவோண நட்சத்திர சிறப்பு பூஜை

உளுந்தூர்பேட்டை: எலவனாசூர்கோட்டை ஸ்ரீராஜ நாராயண பெருமாள் சுவாமி கோவிலில் திருவோண நட்சத்திர சிறப்பு பூஜைகள் நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர் கோட்டை ஸ்ரீராஜ நாராயண பெருமாள் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் சுவாமி பிறந்ததையொட்டி ஸ்ரீராஜ நாராயண பெருமாள் சுவாமிக்கு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 9 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் புஷ்பம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பாகவதர்கள் பஜனை பாடல்கள் பாடினர். பின்னர் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜை ஏற்பாடுகளை ஸ்ரீராஜநாராயண பெருமாள் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் ராமதாஸ், பாண்டுரங்கன், ராஜேந்திரன், சிவக்குமார், கோவிந்தசாமி, செல்வம், மணவாளன், சரவணன், குருமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !