உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்ப சேவா சங்கத்தின் குரு மரியாதை பெருவிழா

அய்யப்ப சேவா சங்கத்தின் குரு மரியாதை பெருவிழா

விழுப்புரம்: காணையில் அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் சார்பில் குரு மரியாதை பெருவிழா நடந்தது. விழுப்புரம் மாவட்ட அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் சார்பில், 6ம் ஆண்டு குரு மரியாதை பெருவிழா, மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய கிளை சங்கங்கள் திறப்பு விழா நடந்தது. காணை செந்தமிழ் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் டாக்டர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட புரவலர் முரளிதர அய்யர் இறை வணக்கம் பாடினார். மாநில செயலாளர் அய்யப்பன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். காணை ஒன்றிய சேர்மன் இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர் சிகாமணி ராஜன், கிளை செயலாளர் லட்சுமிபதி குருசாமி, ஒன்றிய கவுன்சிலர் அமீர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் 18 ஆண்டுகளுக்கு மேல் சபரிமலைக்கு சென்று வந்த, அய்யப்ப பக்தர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகிகள் கேசவலு, சங்கரலிங்கம், விக்ரமன், சுப்ரமணியன், ஆறுமுகம், சோமசுந்தரம், திருமூர்த்தி, விழாக் குழுவினர் கணேசன், சிவக்குமார், செல்வராஜ் மற்றும் லட்சுமிபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !