உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டையில் ரத்தினவேல் மகேஷ்வர பூஜை!

தேவகோட்டையில் ரத்தினவேல் மகேஷ்வர பூஜை!

தேவகோட்டை: தேவகோட்டை நைனப்ப ஐயா நகரத்தாரால் என்பவரால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் வைரக்கற்களுடன் ரத்தினகற்களால் ஆன கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரத்தின வேல் செய்யப்பட்டது. பாதுகாப்பு கருதி 1942 ம் ஆண்டு முதல் குன்றக்குடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வேல் தான் பழநி பாதயாத்திரையின் போது கொண்டு செல்லப்படும். பழநியில் சிறப்பு பூஜை செய்யபடும். மாசிமகத்தன்று தேவகோட்டைக்கு கொண்டு வரப்பட்டு நகரபள்ளிக்கூடம் என்ற இடத்தில் முருகனுக்கு சாற்றப்பட்டு பூஜை செய்யப்படும். பாரம்பரியமிக்க இந்த ரத்தினவேலை வேறு எங்கும் எடுத்துச் செல்வதில்லை.  இந்த ரத்தினவேலை திருநீறு பையில் இருந்து வெளியே எடுத்தால் 16 மூடை அரிசியில் சாதம் வடித்து மக்களுக்கு சாப்பாடு போடவேண்டும் ( ஏற்கனவே 36 மூடை என்று இருந்தது)

புதுப்பிப்பு :  300 ஆண்டுகள் ஆனதால், வேலில் கற்கள் பெயர்ந்து இருந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் நைனப்ப ஐயா குடும்பத்தினரால் புதுப்பித்தனர். டிச. 6 ந்தேதி கார்த்திகை வெள்ளியான இன்று காலை, புதுப்பிக்கப்பட்ட ரத்தினவேல் நைனப்ப ஐயா இல்லத்தில் இருந்து, தேனப்பன் செட்டியார் ஊர்வலமாக எடுத்து வந்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்தனர். நகர பள்ளிக்கூடத்தில் உள்ள முருகனுக்கு சாற்றி நகரத்தார் மகேஸ்வர பூஜை செய்தனர்.  நிகழ்ச்சியில், சாமியாடி செட்டியார் பழனியப்பன், அரன்மனை பொங்கல் என்றழைக்கப்படும் பழனியப்பன்,உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 
அன்னதானம்: வேல் எடுத்தால் 16 மூடை அரிசியில் சாதம் வடித்து போடவேண்டும் என்ற ஐதீகத்தின் படி சாதம் வடிக்கப்பட்டு,அறுசுவையுடன் கூடிய அன்னதானம் ஆயிரக்கணக்கானோருக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !