சித்தி விநாயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
காவாங்கொளத்தூர்: காவாங்கொளத்தூர் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்டது காவாங்கொளத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், புதியதாக தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, துர்கை அம்மன், பைரவர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் அமைத்து திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, நேற்று காலை 9:00 மணிக்கு கிராம தேவதைகள் வழிபாடும், புதிய சிலைகளுக்கு கரிக்கோலமும், மகா கணபதி ஹோமமும், புதிய சிலைகள் கண் திறத்தல் பிரதிஷ்டையும் நடந்தது. அதன்பின் மாலை 9:00 மணிக்கு பூர்வாங்க நிகழ்ச்சியும், முதல் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று, காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், பூர்ணாஹூதியு்ம் நடைபெறும். அதன்பின் காலை 8:00 மணிக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு 8:00 மணிக்கு மூலவர் சித்தி விநாயகர் மலர் அலங்காரத்தில் திருவீதி உலாவும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை காவாங்கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஓபுல்ராஜா, செல்வம், மனோகர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.