லட்சுமி விநாயகர் கோயிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :4362 days ago
திருவள்ளூர்: லட்சுமி விநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை மாதத்தையொட்டி ஐயப்பனுக்கு 10-ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகமும், பிற்பகலில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.