பழனி கோயிலில் சம்பக சஷ்டி!
ADDED :4362 days ago
பழனி: பழனி மலைக்கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கந்த சஷ்டியை அடுத்து வரும் சம்பக சஷ்டி எனப்படும் சுப்பிரமணிய சஷ்டியை முன்னிட்டு தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன. விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.