உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி திருவிழா; 10 நாட்களில் 8 லட்சம் பக்தர்களை அனுமதிக்க திட்டம்

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி திருவிழா; 10 நாட்களில் 8 லட்சம் பக்தர்களை அனுமதிக்க திட்டம்

திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் நடைபெறும். இந்த 10 நாட்களில் சுமார் 8 லட்சம் பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனம் பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 182 மணி நேரம் வைகுண்ட வாசல் கதவு திறந்திருக்கும் நிலையில் ,164 மணி நேரம் பொதுபக்தர்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது மீதமுள்ள நேரத்தில்தான் முக்கிய விருந்தினர்களுக்கு அனுமதிக்கப்படும். ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடுவின் அறிவுறுத்தலின் பேரில் 10 நாட்களும் பொதுப்பக்தர்களுக்கு அதிகபட்ச முன்னுரிமை வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 30, 31 & ஜனவரி 1 – மூன்று நாட்களுக்கு ஸ்ரீவாணி மற்றும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் கிடையாது. இந்த மூன்று நாட்களில் எலக்ட்ரானிக் டிப் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் மட்டுமே தரிசனம் பெற அனுமதி.


ஜனவரி 2–8 (7 நாட்கள்) – ஆன்லைன் டிக்கெட் பெற்று செல்லலாம். இந்த நாட்களில் ரூ15,000 டிக்கெட்டும்  ரூ.300 டிக்கெட்டும் உண்டு. 1,000 – ஸ்ரீவாணி டிக்கெட்டும் வழங்கப்படும். எலக்ட்ரானிக் பதிவு  நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை பதிவு: நவம்பர் 27 – டிசம்பர் 1


தேர்வு: டிசம்பர் 2 தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு டிக்கெட் ஒதுக்கீடு டிடிடி  அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்படும். மொபைல் ஆப் மற்றும் வாட்ஸ் அப்  சேவை,மூலம் மட்டுமே டோக்கன்கள் வழங்கப்படுவதாகவும், வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஜனவரி 6, 7, 8 ஆகிய மூன்று நாட்களில் தினமும் 5,000 டோக்கன்கள் உள்ளூர் பக்தர்களுக்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரியை  முறையில் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !