சிதம்பரம் நடராஜர் கோவிலில் கார்த்திகை சோமவார வழிபாடு
ADDED :1 hours ago
சிதம்பரம்: கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில், நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறை வேற வேண்டி, நடராஜர் கோவிலில் உள்ள கொடிமரத்துடன் சேர்ந்த சித்சபையை 108 முறை சுற்றி வலம் வந்தனர். ஒரு சில பக்தர்கள் 21 முறை வலம் வந்தனர். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வலம் வந்து நடராஜரை தரிசனம் செய்தனர்.