உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா மகா தரிசன விழா கொடியேற்றம், நேற்று காலை நடந்தது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமி, மார்கழி மாத ஆருத்ரா மகா தரிசனம், 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை, சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின், நடராஜர் சன்னிதிக்கு எதிரில் உள்ள கொடிமரத்தில், ஆருத்ரா தரிசன உற்சவக் கொடி ஏற்றப்பட்டது. கொடி மரத்திற்கு, மகா தீபாராதனையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !