உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று கொடியேற்றம் நடந்தது. அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் மிகவும் பழமையானது. இக்கோவிலில் தேர்த்திருவிழா 8ம் தேதி கிராம தேவதை வழிபாடுடன் துவங்கியது. நேற்று அதிகாலை 5.00 மணிக்கு கணபதி வேள்வி நடந்தது. காலை 7.25 மணிக்கு கொடியேற்றப்பட்டது. கோவில் ராஜகோபுரம் முன் உள்ள 32 அடி உயர கொடி கம்பத்தில் நந்திதேவர் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர் கோவிலில் உட்பிரகாரத்தில் உலா வந்தார். பலி பீடம், அக்னி மூலை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின், மன்னீஸ்வரர் தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு, ஓதிமலை ரோடு வழியாக கோவிலை அடைந்தார். கொடியேற்றத்தில், பதுவம்பள்ளி ராமலிங்க சாமிகள் அருளுரை வழங்கினார். கட்டளைதாரர்கள் மணி, பாபு, ராதாகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !