உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஞ்சமலை கோயிலுக்கு ரோடு: பக்தர்கள் எதிர்பார்ப்பு

மஞ்சமலை கோயிலுக்கு ரோடு: பக்தர்கள் எதிர்பார்ப்பு

அலங்காநல்லூர்:அலங்காநல்லூர் வலையபட்டி மஞ்சமலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக தார் ரோடு அமைக்க வேண்டும்.வலையபட்டியில் இருந்து இக்கோயிலுக்கு செல்லும் ரோடு 2006-2007ம் ஆண்டு கிராம சாலை சீரமைப்பு மற்றும் உணவுக்கு வேலை திட்டத்தில் யூனியன் நிர்வாகம் சார்பில் ரூ. 6.50 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது. ஆனால் செம்மண், கிராவல் கொட்டியதுடன் பணிகள் நின்று விட்டன. மழையில் மண் அரிக்கப்பட்டு இந்த ரோடு கரடு முரடாக மாறியதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் நலனுக்காக யூனியன் நிர்வாகம் தார் ரோடு போட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !