கோயிலில் வழிபாடு கிராமத்தினர் மனு
ADDED :4362 days ago
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.இதில், சமயநல்லூர் கிராமத்தினர் அளித்த மனு: பர்வதவர்த்தினி சமேத பரமேஸ்வரர் கோயில் கிராமத்திற்கு பாத்தியப்பட்டது. பல ஆண்டுகளாக இங்கு வழிபாடுகள் நடக்கின்றன. ஆனால், அரசியல் பிரமுகர் ஒருவர் இங்கு வரும் பக்தர்களை மிரட்டி இடையூறு செய்கிறார். பொது வழிபாட்டு தலமாக உள்ள இக்கோயிலை வருவாய் துறை பதிவேட்டில் ஏற்றி, தொடர்ந்து வழிபாடுகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தனர்.