சிவன் கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :4427 days ago
முசிறி: முசிறி யூனியன் வெள்ளூர் கிராமத்தில் உள்ள திருக்காமேஸ்வரர் சிவகாமசுந்தரி சிவன் கோவிலில், 108 சங்காபிஷேகம் நடந்தது. சங்காபிஷேகத்தை முன்னிட்டு, 108 சங்குகளில் புனிதநீர் ஊற்றி யாக வேள்வி பூஜைகள் நடந்தது. பூஜைகளை அடுத்து ஸ்வாமிகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், வாசனை திரவியங்கள் கொண்டு மூலம் அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. கோவிலில் உள்ள ஐஸ்வர்ய மகாலெட்சுமிக்கு அபிஷேக, ஆராதனைகளும் தாமரை மலர் கொண்டு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. பூஜைகளை பாலசுப்ரமணியன் குருக்கள் தலைமை வகித்து நடத்தினார். பூஜையில், வெள்ளூர், முசிறி, அய்யம்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பூஜைகளுக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.