உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகம்மாள் கோவில் மஹா கும்பாபிஷேகம்

நாகம்மாள் கோவில் மஹா கும்பாபிஷேகம்

மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் தாலுகா பாச்சூர் கிராமத்தில் அமைந்துள்ள விஸ்வகர்மா மக்களின் குல தெய்வமான நாகம்மாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஏழாம் தேதி தனபூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை செய்யப்பட்டது. எட்டாம் தேதி, 2ம் கால யாக பூஜை, வேதபாராயணம், தீபாராதனை செய்யப்பட்டது. அன்று மாலை மூன்றாம் கால யாக பூஜைகள் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் காலை நான்காம் கால யாக பூஜைகள் செய்யப்பட்டது. காலை ஏழு மணியளவில் புனித நீருற்றி மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவை கிருஷ்ணமூர்த்தி ஆச்சாரியார் தலைமையில் ஜெயராமன், பவன், தரனேஷ் மற்றும் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !