வில்வவனநாதர் சுவாமிக்கு அப்ளிகேசன் எழுதி.. கைலாசநாத சுவாமியிடம் கொடுத்த வாலிபர்!
ஆழ்வார்குறிச்சி: கடையத்தில் இறைவனுக்கு அப்ளிகேசன் கொடுத்த டிப்டாப் வாலிபர்.கடையம் பஸ் ஸ்டாண்ட் அருகே கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நேற்று முன்தினம் காலை சுõமர் 9.20 மணியளவில் டிப்டாப்பாக ஒரு வாலிபர் வந்தார். கோயில் வாசலில் அமர்ந்து கொண்ட 3 துண்டு சீட்டுகளில் விறுவிறுவென வேகமாக ஏதோ எழுதினார். கோயில் பட்டரிடம் 3 சீட்டையும் கொண்டு கொடுத்து ஏதாவது ஒன்றை எடுத்து தாருங்கள் என கேட்டு ஒரு சீட்டை மட்டும் வாங்கிவிட்டு வேகமாக வெளியே சென்ற அந்த வாலிபர் பின்னர் திரும்பி வந்து மிகவும் நன்றி, சந்தோசம் என கூறிவிட்டு சென்றுவிட்டார். அவர் கொடுத்த 3 சீட்டில் உள்ள தகவலை பார்த்தால் அதில் உயர்திரு. அருள்மிகு வில்வவனநாதர் சுவாமி துணை, மனக்கஷ்டம் முழுவதும் நீங்கி, நிறைந்த கல்வி ஞானம், நல்ல ஞாபக சக்தி, சிறந்த வீரம், வற்றாத செல்வம், நீங்கா அன்பு, உம்மை என்றும் மறவாத நிலை, நிறைந்த அனுக்கிரகம், உம்மிடம் பெற்ற அனைத்து வரங்களும் விரைவில் செயல்பட தயவு செய்து அருள்புரிய வேண்டும் என எழுதி வைத்துள்ளார். சுவாமியிடம் மனதார கோரிக்கை வைப்பது சரி. எழுத்து மூலமாகவும் கோரிக்கை வைப்பதும் சரி தவறில்லை. ஆனால் தனது கோரிக்கைகளுக்கான விண்ணப்பத்தை உயர்திரு. அருள்மிகு வில்வவனநாத சுவாமிக்கு எழுதி அதை கைலாசநாதசுவாமியிடம் கொடுத்து சென்றதால் இதையறிந்தவுடன் அவசரத்தில் சுவாமியை மாற்றி அப்ளிகேசன் அளித்தவரின் நிலைமை எண்ணி சிரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.