உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடனகோபால நாயகி சுவாமி 171வது ஜெயந்தி விழா!

நடனகோபால நாயகி சுவாமி 171வது ஜெயந்தி விழா!

மதுரை: மதுரையில் நடனகோபால நாயகி சுவாமி 171வது ஜெயந்திவிழா, டிச.,17 முதல் 23 வரை நடக்கிறது. தமிழ், சவுராஷ்டிர மொழிகளில் ரங்கநாதர் மீது கீர்த்தனைகளைப் பாடியவர் இவர். இவருக்கு மதுரை தெப்பக்குளம் மேலவீதியில், "கீதா நடன கோபால நாயகி மந்திர் (கோயில்) உள்ளது. இங்கு ஜெயந்தி விழா நடத்தப்படுகிறது. விழாவை, டிச., 17 மாலை 5 மணிக்கு, ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் மடத்தின் 41வது பட்டம், பரமஹம்ச ரங்க ராமானுஜ ஜீயர், நாதமுனி அரையர் ஆச்சார்ய சுவாமிகள் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். தினமும் மாலையில் பட்டிமன்றம், கருத்தரங்கு நடக்கிறது. சுவாமிகளின் முக்தி தினமான, வைகுண்டஏகாதசியன்று, (2014 ஜன.,11) மதியம் 12 மணிக்கு பல்லக்கு விஜயம் நடக்கிறது. இத்தகவலை, ஸ்ரீ நாயகி குரு பாததூளி கே.ஆர்.கிருஷ்ணமாச்சாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !