ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4341 days ago
இடங்கணசாலை கிராமம் கோனேரிப்பட்டியில் ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. அதையொட்டி நேற்று முன்தினம் கிராமசாந்தி பூஜை நடந்தது. நேற்று அதிகாலை மகாகணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடந்தது. இதை தொடர்ந்து கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாரைதப்பட்டை முழங்க தீர்த்தக்குடங்களை சுமந்து யானை, குதிரை, பசுக்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.