மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை இடி தாக்கியது!
ADDED :4338 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ராஜ கோபுரத்தை இடி தாக்கியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. மதுரையில் நேற்று இரவு 8.30 மணி முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை பலத்த சப்தத்துடன் இடி தாக்கியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். கோவில் கோபுரத்திற்கு சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து உறுதி செய்ய கோயில் நிர்வாகம் மறுத்து விட்டது. இரவு நேரம் என்பதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் சேதம் குறித்து தெரிவிக்க முடியாது என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ கோபுரம் உள்ள கோபுரங்களில் இடி தாங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாலும், அவை முறையாக பராமரிக்கப்படாததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.